Loading...
 

கிளப் உருவாக்கம் - சாசன உருவாக்கச் சந்திப்பை அட்டவணையிடுத

 

முதல் சந்திப்பைத் திட்டமிடுங்கள்

 

வாழ்த்துக்கள்!, நீங்கள் கிட்டத்தட்ட இலக்கை நெருங்கிவிட்டீர்கள். முதல் சந்திப்புக்கான தேதியை முடிவு செய்து, அப்போது நடைபெறக்கூடிய நிகழ்ச்சி நிரலை உருவாக்கிடவும். சந்திப்பின் போது என்ன நடக்கும், சந்திப்பானது எவ்வளவு நேரம் நடைபெறும், அதில் யாரெல்லாம் பங்கேற்பார்கள், குறிப்பாக - நேரம் ஏதும் வீணடிக்கப்படுவதில்லை என்பன போன்ற விஷயங்கள் அனைவருக்கும் முன்கூட்டியே தெரியும் என்பதை உறுதிப்படுத்த நிகழ்ச்சி நிரல் அடிப்படையானதாகும். 

முதல் சந்திப்பானது இரண்டு அடிப்படை வடிவங்களில் இருக்கலாம்:

போலாந்து Gorzów Speakers என்பவற்றைச் சேர்ந்த Agora தூதர் மைக்கேல் பாப்பிஸ், Agora Speakers International உடைய நோக்கத்தை விளக்கும் அறிமுகச் சந்திப்பிற்கு தலைமை தாங்குகிறார்.
போலாந்து Gorzów Speakers என்பவற்றைச் சேர்ந்த Agora தூதர் மைக்கேல் பாப்பிஸ், Agora Speakers International உடைய நோக்கத்தை விளக்கும் அறிமுகச் சந்திப்பிற்கு தலைமை தாங்குகிறார்.
  • வழக்கமானவற்றின் "சுருக்க" சந்திப்பு, இது வழக்கமான சந்திப்பின் சுருக்கப்பட்ட பதிப்பாக இருக்கும், இது அனைத்து முக்கிய கூறுகளையும் விளக்கும் வகையில் இருக்கும். ஏற்கனவே மற்ற Agora Speakers கிளப்புகளில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் அல்லது நாங்கள் எப்படி செயல்படுகிறோம் என்பது பற்றி அறிந்தவர்களின் உதவியை நீங்கள் பெற சாத்தியமானால், அது இன்னும் சிறப்பாக இருக்கும்.

 

  • "அறிமுக" / "விளக்கக்காட்சி" வகை சந்திப்பு, இதில் நீங்கள் கிளப்பின் நோக்கம், சேருவதனால் கிடைக்கக்கூடிய பலன்கள், கிளப் எவ்வாறு செயல்படுகிறது, கிளப்பில் இருக்கின்ற வெவ்வேறு பாத்திரங்கள் போன்றவற்றை விளக்கலாம், பின்னர் நீங்கள் கேள்வி பதில் பிரிவை நடத்துலாம். பின்வரும் சூழலில் மட்டுமே நீங்கள் இதை செய்ய வேண்டும்:
    • உங்கள் கிளப் எந்த பயிற்சி அமர்வுகளிலும் கலந்து கொள்ளவில்லை என்றால்.
    • பங்கேற்பாளர்களில் பெரும்பாலோர் Agora மெட்டீரியல்கள், குழுக்கள், ஆவணங்கள் அல்லது கற்றல் வீடியோக்கள் பற்றி அறியவில்லை என்றால் (அதாவது, அவர்கள் அமைப்பிற்கு முற்றிலும் புதியவர்கள் என்றால்).

 

முதல் சந்திப்பின் நிகழ்ச்சி நிரல்

Agora கிளப்புகள் செயல்படும் விதம் குறித்து உங்களுக்கு விரிவான அனுபவம் இல்லையென்றால், முதல் சந்திப்புகளுக்கு இங்கே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள அடிப்படை நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

கிளப்பை பதிவு செய்யும் போது முதல் சந்திப்பிற்கான நிகழ்ச்சி நிரலை நீங்கள் பதிவேற்ற வேண்டும். இந்தப் பதிவேற்றமானது மிகவும் சிக்கலான வடிவத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை, உண்மையில் சொல்லப்போனால், அது பிளைன் உரை கோப்பாகக் கூட இருக்கலாம். நாங்கள் இதைச் செய்வதற்கான காரணம் என்னவென்றால், Agora -வில் சேர்ந்து, கிளப்பை ஆரம்பிப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கும் மக்கள், நாங்கள் உண்மையில் நாம் என்ன செய்கிறோம், எப்படிச் செயல்படுகிறோம் என்பதைக் கற்றுக்கொள்வதற்கும் புரிந்து கொள்வதற்கும் அவர்கள் நேரம் செலவிடுவதில்லை என்பதைப் பல சந்தர்ப்பங்களில் நாங்கள் கண்டிருக்கிறோம். அவர்கள் சந்திப்பை நடத்த விரும்புவார்கள், ஆனால் சந்திப்புகளில் என்ன செய்வது என்பது பற்றிய தெளிவான யோசனை அவர்களுக்கு இருக்காது.

கிளப்பைப் பதிவுசெய்யும்போது நிகழ்ச்சி நிரலை அனுப்புமாறு கோருவது சந்திப்பின் போது என்ன நடக்க வேண்டும் என்பதை அனைவரும் தெரிந்து வைத்திருப்பதை உறுதி செய்யும்.

 

நிகழ்ச்சி குறித்து விளம்பரம் செய்வது

 

முகநூல் மற்றும் கூகுள் காலெண்டர் நிகழ்ச்சிகளை உருவாக்குவது பொதுவாக பயனுள்ளதாக இருக்கும், இதனால் மக்கள் பதிவுசெய்து சந்திப்பை தங்கள் சொந்த நிகழ்ச்சி நிரல்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். நீண்ட நாட்கள் கழித்து நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்து அதிகம் திட்டமிட வேண்டாம், ஏனெனில் மக்கள் அதனை வழக்கமாக பதிவு செய்து, பின்னர் இரண்டு வாரங்களுக்கு முன்பான சந்திப்புகளை மறந்துவிடுவார்கள். எனவே, பங்கேற்பாளர்களுடன் ஒரு வாரத்திற்கு முன்பு உறுதிப்படுத்தவும்.

Facebook Event

நிகழ்ச்சியை நீங்கள் உருவாக்கும்போது, அதை ஒரு பொது நிகழ்வாக உருவாக்கிடவும், இதன் மூலம் மக்கள் அது குறித்து அறிந்து மற்றவர்களையும் அழைக்கலாம் அல்லது அவர்களின் வலைப்பதிவுகள் அல்லது வால்களில் இடுகையிடலாம்.

உங்களது நிகழ்ச்சியை உங்கள் நாட்டில் உள்ள Agora Speakers முகநூல் குழுவில் அல்லது சர்வதேச குழுவில் (https://www.facebook.com/groups/agoraspeakers/) வெளியிட மறவாதீர்கள்.


Event சந்திப்பு நடைபெறும் வளாகம் மிகவும் பிரபலமாக இருந்தாலும், அனைவருக்கும் அது நன்றாகத் தெரியும் என்று நீங்கள் நினைத்தாலும், விரக்தியைத் தவிர்ப்பதற்கு, இருப்பிடத்தின் சில படங்களை எடுத்து, சந்திப்பு அறைக்கு எவ்வாறு செல்வது என்பதை விளக்குவது எப்போதும் நல்லது. உங்கள் சந்திப்புக்கு வரும் சில விருந்தினர்கள் அந்த இடத்தை அறிந்திருக்க மாட்டார்கள் அல்லது வேறு நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்.

மேலும், அறையை சென்றடையும் படங்களை இடுகையிடுவதும் வசதியானதாக இருக்கும்.

Puerta

வளாகம் அனுமதிக்குமானால், சந்திப்பு அறைக்கு பார்வையாளர்களை வழிநடத்தும் அம்புக்குறிகளுடன் இரண்டு சைன்களை பிரிண்ட் செய்யவும்.

 

Cartel

 

பிராண்டட் மெட்டீரியல்களை உருவாக்கவும் (விரும்பினால்)

உங்கள் கிளப்பிற்கான பேனர்கள், நிகழ்ச்சி நிரல் டெம்ப்ளேட்கள் போன்றவற்றை உருவாக்க பிராண்ட் போர்ட்டல் அல்லது உடைமைகள் உருவாக்கும் மென்கருவியைப் பயன்படுத்தவும்.
அனைத்து டிஜிட்டல் உடைமைகளும் பிராண்டிங் வழிகாட்டுதலின் கீழ் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்க, அவற்றை நீங்கள் பின்வருவனவற்றில் காணலாம்: /%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D .

நீங்கள் உடைமைகள் உருவாக்கும் மென்கருவியைப் பயன்படுத்தினால், அது தானாகவே பிராண்ட் இணக்கத்தைக் கவனித்துக் கொள்ளும்.


Contributors to this page: agora and shahul.hamid.nachiyar .
Page last modified on Wednesday November 10, 2021 15:00:51 CET by agora.